கறிவேப்பிலை என்னும் பொக்கிஷம்: பல பிரச்சனைகளின் ஒரே தீர்வு
இதை உணவில் சேர்க்கும்போது உணவின் சுவையும் மணமும் மாறுகிறது. தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். பண்டைய காலம் முதல் நம் உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க நாம் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய இந்த இலையால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. கறிவேப்பிலையினால் நன்மைகள் மட்டுமே ஏற்படும்.
கறிவேப்பிலையை (Curry Leaves) அவ்வப்போது பயன்படுத்தினால், அது உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் தலைவலி, இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது. மேலும் தோல் மற்றும் கூந்தலின் அழகையும் இது மேம்படுத்தும். கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
கறிவேப்பிலை தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. மேலும் கறிவேப்பிலை பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. கறிவேப்பிலையில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் மேற்பரப்பைக் குறைக்க உதவும் பொருட்கள் உள்ளன.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது
கறிவேப்பிலையை தினமும் பயன்படுத்தும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு (Sugar Level) சீராக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டு உணவில் இருக்கும் ஸ்டார்சை குளுக்கோஸாக மாற்றும். இதனால் சர்க்கரை அளவை சமன்படுத்துவதில் உடலுக்கு உதவி கிடைக்கிறது. கறிவேப்பிலை இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதிகப்படியான கொழுப்பின் அளவையும் இது சரி செய்கிறது.
வைரல் காய்ச்சலில் நன்மை பயக்கும்
மாறிவரும் பருவ நிலை காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலைத் தடுப்பதிலும் (Viral Fever) கறிவேப்பிலை நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் உடலில் இருந்து விலகி நிற்கும். இதில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது.