அடிக்கடி நெஞ்நெரிச்சலை சந்திக்குறீங்களா? அப்ப இந்த மோசமான நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..

Hiatus Hernia Symptoms In Tamil: நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாது.

அதில் ஒன்று தான் ஹையாடல் ஹெர்னியா என்று அழைக்கப்படும் இரைப்பை ஏற்றம். இது ஒரு வகையான குடலிறக்க பிரச்சனையாகும்.

இப்பிரச்சனையானது உணவுக் குழாயும், இரைப்பையும் இணையும் இடத்தில் ஏற்படும் ஒருவித பெரிய வீக்கம் அல்லது ஒரு தசை வளர்ச்சியைக் குறிக்கிறது. பொதுவாக சிறிய அளவிலான ஹையாடல் ஹெர்னியா எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.

ஆனால் பெரிய அளவிலான ஹையாடல் ஹெர்னியாவைக் கொண்டிருந்தால், அது அடிக்கடி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். பொதுவாக இந்த அறிகுறிகள் சுய மருத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் சரியாகும். ஆனால் தீவிர நிலையில், அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். இப்போது இந்த ஹையாடல் ஹெர்னியாவின் சில எச்சரிக்கை அறிகுறிகளையும், அதற்கான சிகிச்சைகள் எப்படி இருக்கும் என்பதையும் காண்போம்.

ஹையாடல் ஹெர்னியாவிற்கான காரணங்கள்

ஹையாடல் ஹெர்னியாவைக் கொண்ட பெரும்பாலானோருக்கு, அப்பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இந்த வகை ஹெர்னியா பல காரணங்களால் ஏற்படலாம். அதில் பிறவிலேயே வழக்கத்தை விட இரைப்பையின் மேல் பகுதியில் பெரிய இடைவெளி இருப்பது, அப்பகுதியில் காயம், வயதாகும் போது உதரவிதானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கர்ப்பத்தினால் வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தம், உடல் பருமன், நாள்பட்ட இருமல், மிகவும் கனமான பொருட்களை தூக்குவது அல்லது கழிவறையில் நீண்ட நேரம் சிரமப்பட்டு மலம் கழிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஹையாடல் ஹெர்னியாவின் அறிகுறிகள்

ஹையாடல் ஹெர்னியாவின் முதன்மை மற்றும் பொதுவான அறிகுறி நெஞ்செரிச்சல். அதுவம் படுக்கும் போது நெஞ்செரிச்சல் இன்னும் மோசமாக இருக்கும். இது தவிர, பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும்.

* அதிகப்படியான அமில சுரப்பு அல்லது GERD

* நெஞ்சு வலி அல்லது எபிகாஷ்ட்ரியா வலி

* விழுங்குவதில் சிரமம்

* அடிக்கடி ஏப்பம்

* வயிற்று உப்புசம்

* வீங்கிய வயிறு

* வாந்தி போன்றவை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *