புரோ கபடி புள்ளிப்பட்டியல் – தமிழ் தலைவாஸ்-ஐ காப்பாற்றிய டாப் டீம்.. நல்ல மனசுய்யா உங்களுக்கு
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ்-க்கு மறைமுகமாக உதவி செய்துள்ளது இரண்டாவது இடத்தில் இருக்கும் புனேரி பல்தான்ஸ் அணி.
தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி விரைவில் முதல் ஆறு இடங்களில் இடம் பெற்று பிளே – ஆஃப் செல்ல போராடி வருகிறது. கடந்த போட்டியில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தி கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறியும் வருகிறது.
அதே சமயம் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலே இருக்கும் மற்ற அணிகள் அதிக புள்ளிகள் பெறாமலும் இருக்க வேண்டும். அந்த வகையில் ஏழாம் இடத்தில் இருந்த யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாம் இடத்தில் இருந்த புனேரி பல்தான்ஸ் அணி போட்டியை சமன் செய்தது. கடைசி ரெய்டில் ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி பெறலாம் அல்லது ரெய்டர் சிக்கினால் மும்பா ஐ வெற்றி பெறும் என்ற நிலையில் புனேரி அணி, அதை காலி ரெய்டாக மாற்றி போட்டியை டை செய்தது.
அதன் மூலம் யு மும்பா அணி வெற்றி பெறும் வாய்ப்பு பறிபோனது. வெற்றி பெற்றால் 5 புள்ளிகள் கிடைக்கும் நிலையில், போட்டி டை ஆனதால் அந்த அணிக்கு 3 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. இந்த சிறிய வித்தியாசம் கூட தமிழ் தலைவாஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் முன்னேற உதவியாக இருக்கும் என்பதால் புனேரி பல்தான்ஸ் அணி ஒரு வகையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு உதவி இருக்கிறது.