ஆண்டுக்கு 100 பில்லியன் விலங்குகளை உணவாக்கும் உலக மக்கள்: முதலிடத்தில் எந்த மாமிசம்
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான விலங்குகளை சாப்பிடுகிறார்கள் என்றும், இதில் பண்ணை விலங்குகளையே அதிகம் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோழிக்கறி 19 பில்லியன்
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆண்டுக்கு 1 பில்லியன் எண்ணிக்கையிலான பன்றிகளின் மாமிசம் சாப்பிடப்படுகிறது. ஆடுகளின் எண்ணிக்கையும் 1 பில்லியன் என்றே தெரியவந்துள்ளது.
மாடுகளின் எண்ணிக்கை 1.5 பில்லியன் எனவும் கோழிக்கறி 19 பில்லியன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையைவிட இந்த விலங்குகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
கோழிக்கறி முதலிடத்தில் வந்துள்ள நிலையில், நாளுக்கு 205 மில்லியன் கோழிகள் உணவாக்கப்படுவதாகவும் அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நிமிடமும் 140,000 கோழிகள் உணவுக்காக கொல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன் வகையில் மத்தி ஆண்டுக்கு 14 பில்லியன் எண்ணிக்கை என்றும், இறால் ஆண்டுக்கு 3 பில்லியன் எனவும், வாத்து ஆண்டுக்கு 2.9 பில்லியன் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பில்லியன் ஆக்டோபஸ்கள் மற்றும் 100 மில்லியன் சுறாக்கள் உண்ணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்களே அதிகம்
மட்டுமின்றி, கடந்த 50 ஆண்டுகளின் உணவுக்காக பன்றிகள் கொல்லப்படுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சீன மக்களே அதிகமாக மாமிசம் உண்பவர்களாகவும், இதனாலையே அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.