காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள்: ஹமாஸ் வழங்கிய முக்கிய தகவல்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிணைக் கைதிகள் விடுவிப்பதற்கு மாற்றாக நிரந்தர போர் நிறுத்தத்தை காசாவில் கொண்டு வர வேண்டும் என்று ஹமாஸ் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலில் உடனடியாக தேர்தல் வேண்டும் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் Ehud Barak அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரே நாளில் 24 வீரர்கள் பலி

இந்நிலையில் காசாவில் ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய படைகளில் திங்கட்கிழமை மட்டும் 24 வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தரைவழி தாக்குதலை முன்னெடுத்த நாளில் இருந்து இதுவரை இல்லாத ஒரு நாள் உயிரிழப்பு இது ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *