குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள்.. வியக்க வைக்கும் அதிசயம்!
உலகில் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் உள்ளன. அவை பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. ஆனால் சில விலங்குகள் நிறம் மாறும் தன்மை கொண்டவை என்றால் உங்களால் நம்ப முடியுமா?
சில குறிப்பிட்ட உயிரினங்கள் பனிக்காலத்தில் வெள்ளை நிறத்தில் மாறும் தன்மை கொண்டுள்ளன.
பனிக்காலணி குழிமுயல் : பனிக்காலணி குழிமுயல்கள் வட அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படும் மிக அழகிய உயிரினம் ஆகும். நீண்ட காதுகள், பெரிய பின்னங்கால்கள் என தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த முயல்களை பனிக்காலத்தின் போது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
டார்மிகன் : ஆர்டிக் கண்டத்தை வாழ்விடமாக கொண்டுள்ள இந்த வகை பறவைகள் பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் பனிக்காலத்தில் தனது இறக்கைகளை வெள்ளை நிறத்தில் மற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட பறவைகள் ஆகும்.
குறுவால் மரநாய்கள் : வட அமெரிக்கா பகுதிகளில் அதிகம் காணப்படும் இந்த குறுவால் மரநாய்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பனிக்காலத்தின்போது நிறம் மாறி வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் தன்மை கொண்டவை.
சைபீரியன் வெள்ளை எலி : மிகச்சிறிய அளவு கொண்ட இந்த எலிகள் பொதுவாக பழுப்பு நிறத்தில் இருக்கும் . ஆனால் பனிக்காலத்தில் நிறம் மாறி வெள்ளை நிறத்தில் காணப்படும். எந்த நிறமாக இருந்தாலும் அவை மிகவும் அழகான உயிரினம் என்பதில் சந்தேகமே இல்லை.
பேரி கரிபூ : பேரி கரிபூ என்பது ஒரு கிளை மான் வகை ஆகும். இது பனிக்காலத்தில் வெள்ளையாக மாறும் விலங்குகள் பட்டியலில் கடைசியில் உள்ளது. பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இவை பனிக்காலத்தில் வெள்ளை நிறத்தில் காணப்படும்.