அமெரிக்க-பிரித்தானிய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: ஹவுதி நிர்ணயித்த காலக்கெடு

ஐக்கிய நாடு சபையின் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் ஏமன் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் தாக்குதல்

காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை, செங்கடல் பகுதியில் நடந்து வந்த சீரான கப்பல் போக்குவரத்தை சீர் குலைத்து உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தினர்.

இதையடுத்து கடந்த 11ம் திகதி ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் இருப்புகளை குறி வைத்து அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து தாக்குதல் நடத்தினர்.

ஆனால் ஈரானுடன் இணைந்த குழுவுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து இரண்டாவது கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரால் உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பான கடிதம் ஜனவரி 20ம் திகதி முதல் ஆன்லைன மூலமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த முன்னெச்சரிக்கை அறிக்கை தொடர்பான தகவலை ஐக்கிய நாடுகள் சபை செய்தி நிறுனமான AFPயிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *