திமுக மாநாடு நமத்து போன மிச்சர்.., யாருமே அத சாப்பிடவில்லை: கிண்டலடித்த அண்ணாமலை
திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிச்சர் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார்.
‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் மட்டுமே அனைத்து நிகழ்வுகளையும் செய்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சி மீது அதிக பற்றுடன் இருக்கிறார். மேலும், அவர் திருச்சியை விசாலமாக பார்த்து வருகிறார். குறிப்பாக திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக இருப்பதால் தான் புத்தாண்டின் முதல் நிகழ்வாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திமுகவின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன். திமுக ஒரு ஒற்றைக் குடும்ப ஆட்சி என்பதை நிறுத்தவே பாஜக விரும்புகிறது.
சிம்பிளாக சொல்ல போனால் திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமத்துப் போன மிச்சர். அதை யாருமே சாப்பிடவில்லை. சேலத்தில் உள்ள குப்பை கூடைகளில் நீட் விலக்கு அட்டைகளை நிரப்பியது தான் அவர்களது சாதனை” என்று கூறியுள்ளார்.