மனைவியையும் மூன்று மகள்களையும் சுட்டுக்கொன்ற நபர்: அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரம்…
அமெரிக்காவில், தன் மனைவியையும், மூன்று மகள்களையும் சுட்டுக்கொன்ற நபர் ஒருவர், அவசர உதவி எண்ணுக்கு தகவலளித்துள்ளார்.
மனைவி சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறிய நபர்
அமெரிக்காவின் சிகாகோவுக்கு அருகே உள்ள Tinley Park என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து, ஆண் ஒருவர் அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார். தன் மனைவி சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக மட்டும் கூறிய அவர், மேற்கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்துள்ளனர். அங்கு, மஜீதா (Majeda Kassem, 53) என்னும் பெண்ணும், அவரது மகள்களான ஹலீமா மற்றும் சாஹியா (Halema, Zahia, 25) என்னும் இரட்டைக் குழந்தைகளும், அவர்களுடைய தங்கையான ஹனான் (Hanan Kassem, 24) என்னும் இளம்பெண்களும் உயிரிழந்து கிடந்துள்ளார்கள்.
துப்பாக்கியால் சுட்ட நபர், பொலிசார் வரும்போது வீட்டிலேயே இருந்துள்ளார். அவரைக் கைது செய்த பொலிசார், அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.