உங்களுடைய பார்வை செம்ம ஷார்ப்பா..? 6 நொடிகளில் மறைந்திருக்கும் SNOW என்ற வார்த்தையை கண்டுபிடிங்க பார்க்கலாம்..!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது ஒளியியல் மாயை ஆகும். இதுபோன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. மனித மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களை, மக்கள் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர். இன்று இணையத்தில் அதிகமாகப் பரவிவரும் ஒரு வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தைதான் உங்கள் பார்வைக்காக கொண்டுவந்துள்ளோம்.
இணையத்தில் நம்மைக் குழப்பும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. நாம் பார்க்கும் படம் ஒன்றாக இருக்கும், தெளிவாகப் பொறுமையுடன் பார்க்கும்போது கண்களுக்கு தெரிவது வேறொன்றாக இருக்கும். நெட்டிசன்கள் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படத்தில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரும்பாலானோருக்கு சுயத்திறன்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதற்கு வரப்பிரசாதமாகக் கிடைத்துதான் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள். ஒரு படத்தில் மறைந்திருக்கும் விஷயங்களை நாம் எவ்வளவு எளிதில் கண்டறிகிறோம் என்பதைதான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் மதிப்பீடு செய்கிறது. நாம் காணும் முதல் தகவலை வைத்தே இது கணக்கிடப்படுகிறது.
தினசரி கடுமையான வாழ்க்கை முறையில் ஒரு சில நிமிடங்கள் உங்களது மூளைக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு ஆப்டிக்கல் இல்யூசனை புகைப்படத்தை இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். இந்த படத்தில் அடர் பனிப்பொழிவை உங்களால் பார்க்க முடியும். இந்த படத்தில் மறைந்திருக்கும் ஸ்னோ (SNOW) எனும் ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடிப்பதுதான் உங்களுடைய டாஸ்க். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா எனப் பார்க்கலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் SNOW எனும் வார்த்தையைக் கண்டுபிடியுங்கள். ஆனால் இதை கண்டுபிடிக்க உங்களுக்கு வெறும் 6 நொடிகள் மட்டுமே வழங்கப்படும். ரெடியா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. உங்கள் நேரம் முடிந்துவிட்டது.
கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மறைந்திருக்கும் SNOW எனும் எழுத்தைக் கண்டுபிடிப்பதே உங்கள் சவால். இப்போது சாதூர்யமாக மறைந்திருக்கும் எழுத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். மற்றவர்களுக்கு கீழே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
நீங்கள் தேடிகொண்டிருந்த பதில் இந்த புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. இதனை சரியாக 6 நொடிகளில் கண்டுபிடித்து இருந்தால், உங்களது பார்வை திறன் மற்றும் கவனம் சரியாக உள்ளது என்று அர்த்தம். கொடுத்த நேரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லையா? மீண்டும் முயற்சி செய்துபாருங்கள். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.