இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரத்தையும் போற்றும் ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுபோட்டிகள் உலக புகழ்பெற்றவை. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம்ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிகிறார்கள்.
உலகளவில் கவனம் ஈர்த்தாலும், இதுவரை தமிழகத்தில் முறையான, நவீன வசதிகளுடன் கூடிய மைதானம்ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இல்லாமலே இருந்து வந்தது. பல மாவட்டங்களிலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம் மிக குறுகலான இடமாகவே உள்ளன. இதனால் போதிய இடவசதிஇல்லாமல் ஏராளமான பார்வையாளர்கள் போட்டியை காண வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிசெல்வதும் வாடிக்கையாகி வந்தது.
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முந்தைய நாள் இரவே சென்றாலும் பார்க்க இடம்கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புவதும் தொடர்ந்தது.
இந்நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அனைத்து தரப்பினரும் பார்க்க வசதி ஏற்படுத்தும் வகையில்அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னமாகபிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில்அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தற்போது ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் உலக தரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்கீழக்கரையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் சுமார் 4,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசிக்கலாம். இந்தமைதானத்தில், ஏறு தழுவுதல் போட்டிகள் மட்டுமில்லாது, பண்பாடு, கலாச்சார விழாக்கள், பல்வேறு விளையாட்டுநிகழ்ச்சிகள், கால்நடை சந்தை போன்றவையும் நடத்தப்படும் என்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய், மைதானம்பராமரிப்புக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலங்காநல்லூரில் 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டுமைதானத்தை இன்று திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.