ஜன.28-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்..!
சென்னை நந்தம்பாக்கம் சோர்ஸ் இந்தியா எலக்ட்ரானிக் துறை சார்ந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. ” உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 6லட்சத்து 64 கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
உலகத்தரம் வாய்ந்த முதலீடுகள் வருவதற்கு தமிழக முதலமைச்சருடைய திராவிட மாடல் ஆளுமை என்றுதான் பலதரப்பட்ட மக்கள் தெரிவித்து இருந்தனர். இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா நாட்டின் கார்னிங் சர்வதேச நிறுவனம் கொரில்லா கிளாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை, தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது, தமிழகத்திற்கு வந்துள்ளது இது மிகப் பெரிய சாதனை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 28-ம் தேதி காலை ஸ்பெயின் செல்கிறார். ஒருவார காலம் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்தில் முதலமைச்சர் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்கள்.
இதை முன்னிட்டு தற்போது ஸ்பெயின் பயணத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளது. இந்தியாவில் தமிழகம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணியில் உள்ளது. தற்போது 5.6 பில்லியன் இலக்கை அடைந்திருக்கிறோம். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் 8 பில்லியன் இலக்கை அடைந்து விடுவோம்” என அவர் தெரிவித்தார்.