Belly Fat : தொப்பையால் அவதியா? இதோ இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்!
உடல் எடை அல்லது தொப்பை இரண்டையும் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு கட்டாயம் சரிவிகித உணவும், உடற்பயிற்சி இரண்டும் தேவை. அதற்கு சில பானங்களும் உங்களுக்கு உதவும். அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எடை குறைக்க உதவும் பானங்கள் என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தொப்பையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு செல்லில் இருந்து வெளியாகும் கொழுப்பு அதிகரிப்பதன் மூலம் கல்லீரலின் கொழுப்பு கரைக்கும் திறன்களை அதிகரிக்கும், உடல் உடை குறைப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
தேன் பட்டை குடிநீர்
உடல் எடை குறைப்பதில் தேனில் உள்ள இனிப்பு சுவை மற்றும் பட்டையில் உள்ள வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கு பொருட்களுடன் சேர்ந்துகொள்ளும்போது நல்ல பலன்கள் கிடைக்கிறது. பட்டை, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது சர்க்கரையை நன்றாக உடைத்துவிடுகிறது. வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
சுடுதண்ணீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
இளஞ்சூடான தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடலில் அமில அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இது செரிமானத்துக்கும் உதவுகிறது. இது பித்த சுரப்பை தூண்டுகிறது. பசியை கட்டுப்படுத்துகிறது. வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தட்டையான வயிறு கிடைக்க இவையெல்லாம் உதவுகிறது.
அன்னாசி பழச்சாறு
அன்னாசி பழச்சாறில் புரோமெலைன் உள்ளது. இந்த என்சைம் வயிற்றில் உளள் கொழுப்பை கரைக்க உதவுகிறது, புரத வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே தொப்பையை குறைக்க தினமும் ஒரு கிளாஸ் அன்னாசி பழச்சாறு குடிப்பது சிறந்தது. இதை நீங்கள் தினமும் உணவில் எடுத்துக்கொள்வதை கட்டாயமாக்குங்கள்.
மிளகு டீ
மிளகு டீ பருகினால் உடலில் செரிமானம் எளிதில் நடைபெறும். கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. வயிறு உப்புசத்தை தவிர்க்கும் இதன் தன்மை உணவு முழுமையாக செரிமானம் அடைவதை உறுதிசெய்கிறது. வயிற்றுப்பகுதிகளில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. கொழுப்பு இயற்கையிலேயே கரைய உதவுவதற்கு தினமும் இந்த மிளகு டீயை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்வது நல்லது.
செலரி சாறு
மிளகு டீயைப்போன்றதுதான் செலரி சாறு, அது வயிறு உப்புசத்தை போக்க உதவுகிறது. இது இயற்கையில் சிறுநீர் பிரியவும் உதவுகிறது. வயிறு உப்புசம் மற்றும் கொழுப்பு குறைய அதில் சேரும் அதிகப்படியான தண்ணீரை போக்க செலரி சாறு உதவுகிறது.
புரதச்சத்து நிறைந்த ஸ்மூத்தி
அதிக புரதச்சத்துக்கள் கொண்ட ஸ்முத்தியை உங்கள் அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது உங்களுக்கு தேவையில்லாமல் ஏற்படும் உணவு சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தடுக்கும். இந்த ஸ்மூத்திகளில் உள்ள புரதம் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை குறைய உதவுகிறது.
காய்கறிகள் சாறு
இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமும் உள்ளது. இதுவும் தொப்பையை குறைக்கும் வழிகளுள் ஒன்று. இதில் வைட்டமின் சத்துக்களும், மினரல்களும் அதிகளவில் உள்ளன. காய்கறிகள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் கலோரிகளை பராமரிக்கவும் உதவும்.