பாபர் மசூதி இடிப்பு முதல் ராமர் கோயில் குடமுழுக்கு வரை.., கடந்து வந்த பாதை
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், பாலகன் ராமர் சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள், ஆன்மீக குருக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இவ்வாறு மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ள ராமர் கோயிலின் வரலாற்றுத் தடங்கள் பல போராட்டங்களையும், கலவரங்களையும் கொண்டது.
அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை குறித்து விரிவாக பார்க்கலாம்.