அயோத்தி ராமர் கோயிலுக்கு அம்பானி கொடுத்த நன்கொடை.., இத்தனை கோடிகளா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அம்பானியின் நன்கொடை
அயோத்தி ராமர் கோயிலின் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், இந்தியாவின் விவிஐபிக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என நூற்றுக்கணக்கான பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அயோத்தியில் ராமர் கோயிலானது முழுவதுமாக பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 2.51 கோடி நன்கொடையாக ராமர் கோயிலுக்கு அளித்துள்ளார்கள்.