Udhayanidhi : தமிழகத்தின் பொறுப்பு முதல்வராகிறார் உதயநிதி.? வருகிற 27 ஆம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு.?

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திமுகவும் களத்தில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் சிறந்த வேட்பாளர் யார் என தேடும் பணியை தொடங்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 28 ஆம் தேதி அமெரிக்கா, லண்டன், பிரானஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் அமையும் என கூறப்படுகிறது. இந்த பயணத்தில் போது தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் கூட செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலமைச்சர் வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழகம் திரும்புவார் எனவும், சுமார் 10 நாட்கள் வெளிநாடு பயண திட்டம் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக உதயநிதி ஸ்டாலினிடம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. கட்சி மற்றும் ஆட்சியில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திமுக தலைமை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது பொறுப்பு முதலமைச்சர் பதவியே உதயநிதிக்கு வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

பொறுப்பு முதல்வராகிறார் உதயநிதி

முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போது பொறுப்பு முதலமைச்சரை நியமிப்பது முன்பு வழக்கம். ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தொலை தொடர்பில் தொடர்ந்து இருப்பதால் அப்படி எந்த பொறுப்பும் தற்காலத்தில் வழங்கவில்லை. இருந்த போதும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொறுப்பு முதலமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *