திருவண்ணாமலை டூ பழநி.. சட்டென வந்த ஸ்பெஷல் நியூஸ்.. மொத்தம் 5 நாட்களாமே.. தமிழக அரசு தந்த சர்ப்ரைஸ்

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த பஸ்கள் எங்கிருந்து, எந்த ரூட்களில் இயக்கப்படுகிறது தெரியுமா?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

4 நாட்கள் விடுமுறை: நாளை 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி தைபூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வேதாரண்யம்: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம்.

பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .

மேலும், 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம்.

நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரைக்கு இயக்கப்படுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *