“வாய்”விட்ட எடப்பாடி பழனிசாமி.. திமுகவுடன் நெருங்கும் பாஜக? திருப்பியடிக்குது அதிமுக.. இதான் மேட்டர்
எம்பி தேர்தல் நெருங்கிவிட்டது.. ஆனால், அதிமுகவில் இதுவரை கூட்டணி முடிவாகவில்லை.. இதனால், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் முனைப்புடன், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டது.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிமுகவுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்கினால் திமுக கூட்டணி உடையும், அந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையிலும், திமுகவில் இருந்து யாருமே கூட்டணிக்கு வரவில்லை.
மாநாடுகள்: எனினும், இஸ்லாமிய ஓட்டுக்களை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினார் எடப்பாடி.. இதற்காகவே, கடந்த மாதம் கோவை கருமத்தம்பட்டியில் கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதேபோல, அதேபோல, இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தப்போகும் பிரமாண்டமான மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
இதுபோக, சிறுபான்மையினா் பிரச்சனைகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினா் பங்களிப்பையும் கட்சியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் தந்திருந்தார் எடப்பாடி.
சிறுபான்மை ஓட்டுக்கள்: அதுமட்டுமல்ல, 6 வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்ட சிறுபான்மையினர் வாக்குகளை, மறுபடியும் பெற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இவ்வளவு முயற்சிகளும் எடுத்த பிறகு, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ போன்றவை ஆதரவு தந்துள்ளதே தவிர, பெரிய அளவு ஆதரவு இதுவரை அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகள் அதிமுக பக்கம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, அத்தகைய அறிகுறிகள் உறுதியாக தென்படாததால் அப்-செட்டில் இருப்பதாக தெரிகிறது.
கடுகடு எடப்பாடி: இருந்தாலும், தன்னை சந்திக்கும் மாவட்ட செயலாளர்களிடம் “அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும், பொறுமையாக இருங்கள், என்னிடம் யார் யார் பேசிக்கிட்டு இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கடுகடுக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. =இந்த நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கின்றன.