பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்

அசாமில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கார்கே அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அசாம் யாத்திரையில் இடையூறு.யாத்திரையின் 10-வது நாளான நேற்று அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பாத யாத்திரை சென்றார்.அவருடன் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சென்றனர்.

ராகுல் காந்தியை கவுகாத்திக்குள் செல்ல அசாம் போலீசார் அனுமதிக்கவில்லை.இதனால் போலீசாருக்கும், காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது.போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டிவிடுகிறார்.

காங்கிரஸே வன்முறை தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.காங்கிரஸ் வன்முறையால் கவுகாத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று (ஜன.24) எழுதியுள்ள கடிதத்தில், “ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை உடைக்க அல்லது அத்துமீறலைக் கண்டுகொள்ளாமல் பா.ஜ.க.வினரை அஸ்ஸாம் போலீசார் தொடர்ந்து அனுமதிக்கின்றனர்.

அவர்கள் ராகுல் மற்றும் அவரது குழுவினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.அசாமில் யாத்திரை தொடங்கிய முதல் நாள் முதல் ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்.இத்தனை இடையூறுகளையும் மீறி ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை முடித்துள்ளார்.

எனவே நீங்கள் தலையிட்டு ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய அசாம் முதல்வர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்.“எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும் முன் மற்றும் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்படுவதற்கு முன், அவர் தலையிட்டு யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *