Vazhaikai Vadai : வாழைக்காய் வடை! யம்மியான ஸ்னாக்ஸ் ரெசிபி!

வடை எப்போதும் ஒரு சிறப்பான மாலை நேர சிற்றுண்டி. இவற்றை பல வழிகளில் தயாரிக்க முடியும். இந்த வாழைக்காய் வடையை நீங்கள் எளிதாக செய்துவிடமுடியும். இது ஆரோக்கியமானதும் கூட. இதை நீங்கள் டெமேட்டோ கெட்ச்அப் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குழந்தைகள் இந்த வடையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளிவிட்டு வந்தவுடன் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் சுவை அள்ளும்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3

உப்பு – அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது

இஞ்சி – ஒரு துண்டு பொடியாக நறுக்கியது

சீரகம் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்

செய்முறை

வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காய் துண்டுகளை ஆறவிட்டு தோல் நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.

இதில் பெரிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும்.

பிசைந்த மாவில் இருந்து சிறிய அளவு எடுத்து வடை போல் தட்டி வைக்கவேண்டும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி செய்த வடையை போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காய் வடை தயார். இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்போ.

பொதுவாகவே வாழைக்காய் இருந்தால், பஜ்ஜிதான் செய்வோம். ஆனால், அதில் இதுபோல் வடை செய்து பாருங்கள். சுவை அள்ளும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *