ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலா..? – தயாராகும் தமிழ்நாடு..!
தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான தீவிர களப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக ஏப்ரல் மாதமே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக ஆளும் கட்சியான திமுக, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழு, அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தனிக்குழு என 3 குழுக்களை நியமித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்திய திமுக, அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24ம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ம் தேதி வரை 40 தொகுதிகளிலும் உள்ள நாடாளுமன்ற தேர்தல் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியான அதிமுக-வும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருவதை எடுத்துரைக்கும் விதமாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரசாரம், விளம்பரம் என அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள தனித் தனியே குழுக்களை அமைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ் வெளியிட்ட நிலையில், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனிக் கூட்டணியை ஏற்படுத்தி போட்டியிடும் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக களமிறங்கவுள்ள தமிழ்நாடு பாஜக-வும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு பாஜக-வில் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பார்வையாளர்களையும்,