ரயில் பயணிகளே உஷார்… ஆன்லைனில் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்.. ஐஆர்டிசி அதிரடி… !
இந்திய ரயில்வே தற்போது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் பெரும்பாலானோர் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஐஆர்சிடிசி இணையதளத்தை பொறுத்தவரை சுமார் 30 மில்லியன்அதாவது 3 கோடி பயனர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியபோது, ஐஆர்சிடிசி பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டன.
அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் தங்கள் கணக்கைச் சரிபார்க்க வேண்டும். சுமார் 40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்குகளை இன்னும் சரிபார்க்கவில்லை. கணக்கைச் சரிபார்க்காதவர்கள் எதிர்காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டியது அவசியம். தொடர்ந்து பல மாதங்களாக இணையதளம் அல்லது ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு IRCTC செய்த மாற்றம் பொருந்தும்.
இதுவரை இன்னும் கணக்கை நீங்கள் சரிபார்க்கவில்லை எனில் சரிபார்ப்பு செயல்முறையை விரைவில் செய்து முடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரிபார்ப்பது அவசியம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளீடு செய்து சரிபார் பொத்தானைக் கிளிக் செய்து தேவையான தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இதற்கு அதிகார்ப்பூர்வ இணைக்கப்பட்டுள்ள மொபைலில் OTP வரும்.
அதை உள்ளிட்டு மொபைல் எண்ணை சரிபார்க்கவும். மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, அஞ்சல் ஐடியும் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறைகு பிறகு வழக்கம் போல் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.