40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!
எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் அடிமைப்பெண் என்ற கதை உருவாகிறது. இன்றைய பாகுபலிக்கு ஈடான கதை என்றால் அந்த கதையை சொல்லலாம்.
இரு எம்ஜிஆர் இரு ஜெயலலிதா என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள்.
இதில் தாய்க்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் எம்ஜிஆர். கொள்ளைக்காரர்கள் தனது தாயை சிறை வைத்திருப்பார்கள். தாயை சிறையில் இருந்து மீட்க ஹீரோ போராடுவார்.
தாயை சென்று ஆசையோடு பார்க்கலாம் என்றிருபார் ஹீரோ. ஆனால் தாய் பார்க்க மறுப்பார் . என்னை போல் எத்தனையோ பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். அவர்களையும் மீட்டெடுத்து விட்டு அதன் பிறகு வா என்று சொல்லி தாய் சொல்லி விடுவாள்.
கொள்ளையர்களை வீழ்த்தி விட்டு தாயை , பெண்களை மீட்டு விட்டு, தாயை ஆசையாக பார்க்க புறப்பட போகும் மகன், தான் பார்க்கும் இடமெல்லாம் தன் அன்னையாகவே தெரிகிறாள். அதை வைத்து ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்தார். எத்தனையோ கவிஞர்கள் வாலி கண்ணதாசன் என அனைவரும் எழுதுகிறார்கள் யாருடைய பாடல்களும் எம்ஜிஆர் க்கு திருப்தி அளிக்கவில்லை.
அதன் பின் ஆலங்குடி சோமு எழுதிய பாடல் வரிகளே எம்ஜிஆரை ஈர்த்தது.
அந்தப் பாடலை கேவி மகாதேவன் இசையில் முதலில் எஸ்பிபி பாடி இருந்தார். எஸ்.பி.பியின் இனிமையான இளமையான குரல் இந்த பாட்டிற்கு ஒத்து வராது என்று எம்ஜிஆர் சொல்லிவிட்டார்.
இந்த படத்திலேயே இன்னொரு பாடலை எஸ் பி பி அவர்கள் பாடியிருப்பார். அது காதல் நிறைந்த இனிமையான குரல். ஆனால் இது தாயை பார்க்க செல்லும் ஒரு ஆவேசத்துடன் பாட வேண்டும் என்பதினால், டி எம் எஸ் தான் இதற்கு சரியாக இருப்பார் என டி எம் எஸ் ஐ நாடினார்கள்.
அதன்பின் டி எம் எஸ் அவர்கள் இந்த பாடலை பாடி கொடுத்தார் , அப்படி மாபெரும் ஹிட் ஆன இந்த பாடல்
“தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை”
அனைத்து படத்தின் பாடல்களிலும் இரண்டு சரணங்கள் தான் இருக்கும் . ஆனால் இந்த படத்தின் பாடலில் நான்கு சரணங்கள் இருக்கும். ஏனென்றால் தன் தாயைப் பார்க்க புறப்படும் ஒரு இளைஞன், தான் பார்க்கும் நீரில் நிலத்தில் எல்லாம் தன் அன்னையை காண்பான் . அதனால் அதனுடைய பண்புகளை எடுத்து விளக்குமாறு ஆலங்குடி சோமு எழுதியிருப்பார்.