Rajini Dhanush: “தனுஷுக்காக சீட் கேட்டு ஏமாந்த தலீவர்..?” ரஜினிக்காக வருத்தப்பட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷுக்காக சீட் கேட்டு ஏமாந்துவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்த தனுஷ், சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இந்நிலையில், தனுஷுக்காக ரஜினி சீட் கேட்டதாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
தனுஷுக்கு சீட் கேட்டு ஏமாந்துபோன தலீவர்
சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் அடுத்த மாதம் வெளியாகிறது. இன்னொரு பக்கம் தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி. இதனிடையே அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
அதேபோல், தனுஷும் தனது மகன்களுடன் ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே விஐபிகளுக்கான முன் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட மேலும் சிலர் அமர்ந்திருந்தனர். அப்போது ரஜினியை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்த வீடியோ வைரலாகின.
முன்னதாக ராமர் கோயில் நிர்வாகியிடம் ரஜினி நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த வீடியோவும் வைரலானது. அதில் தனது குடும்பத்தினருக்கும் விஐபி வரிசையில் ரஜினி சீட் கேட்டு விவாதம் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும், அது குறித்து உண்மையான நிலவரம் தெரியவில்லை. இந்நிலையில், ரஜினி சீட் கேட்டது தனது மருமகன் தனுஷுக்கும் பேரனுக்கும் தான் என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அதாவது, “முன்வரிசையில் எக்ஸ்ட்ராவா ரெண்டு சீட் கிடைக்குமா? மிக முக்கிய நபர்களுக்கு மட்டுமே முன் வரிசையில் அனுமதி. அதில் தலீவரும் ஒருவர். ஒருபக்கத்தில் ராமர் கோயில் நுழைவு வாயில். மூன்று பக்கங்களில் விஐபி இருக்கைகள். உதாரணம்: அமிதாப், அம்பானி, ரஜினி. தனுஷ் உள்ளிட்டோர் சிலவரிசைகள் தள்ளி பின்னே அமரா வைக்கப்பட்டனர்.”
“கோயிலுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக இவர்களை பார்த்து மோடி வணக்கம் வைத்து விட்டு செல்வார் என கூறப்பட்டது. ஆகவே தன்னருகே தனுஷை நிற்க வைத்து மோடிக்கு வணக்கம் போட திட்டம் போட்டார் தலீவர். தனுஷ் உடன் அவரது மகனும் வந்திருந்தார். ஆகவே இரண்டு சீட்களை முன்வரிசையில் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்தார் பொறுப்பாளர். அதனால் அப்செட் ஆன தலீவர் தன் இருக்கையில் வருத்தத்துடன் அமர்ந்தார் என கூறப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.