ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!
இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு.
பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று (24. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்க விலையில், நேற்று ரூ.46,640க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.46,680க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.5,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.50 என்று விற்பனை ஆன நிலையில் இன்று அது ரூ.76.80ஆக உயர்ந்திருக்கிறது.