முதல்ல இன்போசிஸ், இப்போ டிசிஎஸ்.. டெக் மஹிந்திரா செய்த வேலையைப் பாத்தீங்களா..?!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவைகளில் ஒன்றாக இருக்கும் டெக் மஹிந்திரா டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான ஆர்.ராஜஸ்ரீ என்பவரை அமெரிக்காவின் மூலோபாயப் பிரிவின் தலைமை வளர்ச்சி அதிகாரியாக நியமித்துள்ளது.
விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் உட்படப் பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து முக்கிய அதிகாரிகளை 2023ல் அடுத்தடுத்துக் காக்னிசென்ட் ஈர்த்து பெரும் சம்பளத்தில் பணியில் அமர்த்தியது பெரிய பிரச்சனையாக இருந்து வரும் வேளையில் தற்போது இதேவேலையை டெக் மஹிந்திரா செய்யத் துவங்கியுள்ளது.
சமீபத்தில் புதிய குளோபல் சீஃப் பீப்புள் ஆஃபீசராக ரிச்சர்ட் லோபோ-வை டெக் மஹிந்திரா நியமித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தில் ரிச்சர்ட் லோபோ தனது நிர்வாகத் துறை தலைவர் மற்றும் முன்னாள் HR பிரிவு தலைவர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் 2000 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.இவரைத் தொடர்ந்து ராஜஸ்ரீ அவர்களைத் தற்போது டெக் மஹிந்திரா ஈர்த்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் ரீடெய்ல் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் ராஜஸ்ரீ 20 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.மார்ச் 2023 இல் முன்னாள் தலைமை நிர்வாகி ராஜேஷ் கோபிநாதன் திடீரென வெளியேறிய உடனேயே, டிசிஎஸ்-ல் இருந்து அவர் ராஜினாமா செய்வதாக ஜூலை மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது டெக் மஹிந்திராவில் இணைந்துள்ளார்.இன்ஃபோசிஸிலிருந்து நிறுவனத்திற்கு மாறிய சிஇஓ மோஹித் ஜோஷி தலைமையிலான டெக் மஹிந்திரா நிர்வாக அணியில் ராஜஸ்ரீ இணைகிறார். டிசம்பரில் சிபி குர்னானி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மோஹித் ஜோஷி பொறுப்பேற்றார், இவரது தலைமையில் தான் ரிச்சர்ட் லோபோ இணைந்தார்.
கோயம்புத்தூர்-ஐ தேடிவரும் 2 மெகா ஐடி நிறுவனங்கள்.. இனி பெங்களூர், சென்னை பக்கம் ஓட தேவையில்லை..!! இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தனது உயர்மட்ட நிர்வாகத்தை வலிமைப்படுத்தும் பொருட்டுச் சக போட்டி நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளை இழுத்து வருகிறது. கொரோனா காலத்தில் அதிகப்படியான திட்டங்கள் பெற்ற காரணத்தால் மேனேஜர் வரையிலான ஊழியர்களைச் சக போட்டி நிறுவனத்தில் இருந்து அதிகளவில் இழுத்தது.ஐடி சேவை துறை வேகமாக மாறி வரும் இந்தச் சூழ்நிலையில், புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐடித் துறையில் தற்போது நிலவும் மந்த நிலை விரைவில் சரியாகும் எனக் கணிக்கப்படும் வேளையில், அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற மூத்த நிர்வாகப் பிரிவில் அதிகப்படியான மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.