தமிழ்நாடு எங்களுக்கு கொடுத்துவைக்கல.. வேறு வழியில்லாமல் JSW எடுத்த முடிவு.. புதிய தொழிற்சாலை..!!

ந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் JSW குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.
JSW குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் நீண்ட காலமாக ஆட்டோமொபைல் துறையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டுப் பல தொழிற்சாலைகளைக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தார். ஆனால் இந்த முயற்சியை சஜ்ஜன் ஜிண்டால் விடாமல் செய்தார். சமீபத்தில் தான் JSW குழுமம் மற்றும் சீனாவின் SAIC மோட்டார் உடன் 2023 நவம்பரில் இந்தியாவில் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கியது. இக்கூட்டணி இந்தியாவில் MG மோட்டார்ஸ் கீழ் கிரீன் மொபிலிட்டி மற்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு, விற்பனையில் கவனம் செலுத்த ஒப்பந்தம் செய்தது.
JSW குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலையை அமைக்க முயற்சி செய்தார், இதற்காகச் சென்னை மறைமலைநகர் போர்டு தொழிற்சாலையைக் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் போர்ட் மீண்டும் தனது புதிய மாடல் காரை சென்னை தொழிற்சாலை வாயிலாக இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் JSW குரூப் தற்போது இந்தியாவின் கடலோர மாநிலமான ஒடிசா-வில் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தித் திட்டங்களக்காகச் சுமார் 4.81 பில்லியன் டாலர் கிட்டத்தட்ட 40000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. 2023ஆம் ஆண்டு இந்தியாவின் கார் விற்பனையில் எலக்ட்ரிக் மாடல்கள் வெறும் 2% பங்கீட்டை மட்டுமே கொண்டு உள்ளது.
இத்துறையில் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் மத்திய அரசு 2030க்குள் எலக்ட்ரிக் கார் 30% பங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் JSW குழுமத்திற்கும், MG மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உள்ளது.தற்போது JSW குழுமம் அறிவித்துள்ள 40000 கோடி ரூபாய் திட்டத்தின் கீழ் முதல் இரண்டு கட்டத்தில் 25000 கோடி ரூபாய் முதலீட்டில் EV பேட்டரி உற்பத்தி ஆலை மற்றும் EV உதிரிபாகங்கள் ஆலையில் அமைக்க உள்ளதாகத் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 3வது கட்டமான 15000 கோடி ரூபாய் முதலீட்டில் EV உதிரிபாகங்கள் காம்பிளெக்ஸ்-ஐ கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 40000 கோடி ரூபாய் தற்போது ஒடிசா-வுக்குச் சென்றுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *