அம்…மாடியோவ்… ராம் லல்லா சிலை 250 கோடி ஆண்டு பழமையான கிரானைட் கல்லில் உருவானது… !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவிலில் ராம் லல்லா குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலை மொத்தம் 51 அங்குலம். இந்த சிலை கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டது. “இந்தக் கல் 2.5 பில்லியன் (250 கோடி) ஆண்டுகள் பழமையானது” என பெங்களூருவில் உள்ள தேசிய ராக் மெக்கானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனை இந்திய அணைகள் மற்றும் அணுமின் நிலையங்களுக்கான பாறைகளை சோதிக்கும் NIRM என்ற நிறுவனம் இயற்பியல்-இயந்திர பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த கல்லில் செதுக்கப்பட்ட சிலைக்கு குறைந்தபட்ச பராமரிப்பே போதுமானது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கும் எனக் கூறப்பட்டது. குழந்தை ராமர் சிலை செதுக்கப்பட்ட பாறை தண்ணீரை உறிஞ்சாது. இது கார்பனுடன் வினைபுரிவதில்லை என டாக்டர் வெங்கடேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கருப்பு கிரானைட் கல் எந்த வகையான செதுக்கலுக்கும் ஏற்றதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். பூமி உருவான போது உருகிய எரிமலைக் குழம்பு குளிர்ந்தபோது கிரானைட் பாறைகள் உருவாயின. இந்த கிரானைட் மிகவும் கடினமானவை ராமர் கோயில் பாரம்பரிய கட்டிடக்கலை பாணியில் நவீன அறிவியல் மற்றும் பொறியியல் நுட்பங்களுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.