மசாலா, எண்ணெயில் பிரியாமல் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க.! சுவையில் அசந்துடுவீங்க.!?
இந்த மீன் வருவல் வீட்டில் செய்யும் போது மீனில் தேய்த்த மசாலா எண்ணெயில் பிரிந்து சுவையே இல்லாமல் போய்விடுகிறது என்று பலருக்கும் கவலையாக இருக்கும். ஆனால் இந்த முறையில் செய்து பாருங்க சுவை அசத்தும்
தேவையான பொருட்கள்: மீன் – 1/2 கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஸ்பூன், மிளகாய் பொடி – 1ஸ்பூன், சோம்புத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் மிளகு தூள் -1/4ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சோளமாவு, அரிசி மாவு – 1 ஸ்பூன், எலுமிச்சை -1
முதலில் மீனை நன்றாக கழுவி தண்ணீர் வடிய தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மிளகாய் பொடி, சோம்புத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு சிறிதளவு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அதில் மீன் சேர்த்து மீனில் மசாலா கலவை நன்றாக படும்படி பிசைந்து விட வேண்டும்.
பின்பு உடனே பொறித்து எடுக்காமல் ஒரு மணி நேரம் வரை நன்றாக காய விட்டு மசாலா மீனுடன் கலக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பின்பு மீனை எடுத்து அதில் சோள மாவு மற்றும் அரிசி மாவு சிறிது கலந்து நன்றாக பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மீனிலிருந்து மசாலா எண்ணெயில் தனியாக பிரிந்து வராது சுவையும் நன்றாக இருக்கும்.