குடியரசு தினம் 2024: குடியரசு தின அணிவகுப்பு தேதி, இடம், நேரம் என்ன? முழு விபரம் இதோ..!
75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்று வருகிறது.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியே கிடைத்தது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 75வது குடியரசு தின விழா முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுதந்திரம் தினம் என்றால் முதல்வரும், குடியரசுத் தினம் என்றால் மாநில ஆளுநரும் கொடியேற்றுவது வழக்கம்.
அணிவகுப்பு தேதி, இடம் மற்றும் நேரம்
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே நடைபெற உள்ளது. குடியரசு தின நிகழ்வு காலை 8.00 மணிக்கு தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்ற உள்ளார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.
முப்படைகளின் அணிவகுப்பு
அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
பதக்கம் வழங்கும் முதல்வர்
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.