டி20 அணியை அறிவித்த ஆஸ்திரேலியா. கேப்டனாக மிட்செல் மார்ஷ்.!
ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வென்றபோது ஆஸி அணியை மார்ஷ் வழிநடத்தினார். இருப்பினும், இந்திய சுற்றுப்பயணத்தின் போது விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் அணியின் பொறுப்பை ஏற்றார். பிப்ரவரி 21-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் தொடங்க உள்ளது. இதனால் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு யார் கேப்டனா இருப்பார் என்பது குறித்து கேள்வி என்னும் புரியாத புதிராக உள்ளது. காரணம் ஆரோன் ஃபிஞ்ச் 2022 இல் T20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு T20 போட்டிக்கு நிரந்தர கேப்டனை ஆஸ்திரேலியா அணி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டி20 உலகக்கோப்பையில் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா டி20 அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட் , நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ் , மேத்யூ வேட், டேவிட் வார்னர் , ஆடம் வார்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.