டாஸ்மாக்கிற்கு சீல் வைத்த வட்டாட்சியர் .. எதையும் கண்டுக்காமல் அமோகமாக நடந்த விற்பனை..!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாநாட்டுப் பந்தல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் 7468 மற்றும் 7247 என்ற இரண்டு அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன.
மாநாட்டுக்கு வந்த தி.மு.க.,வினர், வாகனங்களை ரோட்டில் நிறுத்திவிட்டு, மதுக்கடையில் மதுபானம் வாங்க திரண்டதால், அப்பகுதியில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் உத்தரவை மீறிய மதுக்கடைக்கு சீல் வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதையடுத்து, பூட்டிய அரசு மதுக்கடை அருகே உள்ள சந்தில் அதிகாலை முதல் போலி மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சந்து கடை நடத்தும் நபர் மீது, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.