கணவர் இல்லையெனில் வேலை இல்லை.. பெண்களுக்கு புதிய உத்தரவிட்ட தலிபான் அரசு..!
குறிப்பாக 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல உரிமை இல்லை. பெண்களின் சுதந்திரம், ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், சலூன்களை மூடுதல், பூங்காக்களுக்குள் நுழைய அனுமதி மறுப்பு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆண் பாதுகாவலர் அல்லது கணவர் இல்லாத பெண்கள் பொது இடங்களில் பயணம் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சமீபத்தில் சுகாதாரத்துறையில் பணிக்கு வந்த பெண்ணை பணி நீக்கம் செய்து தலிபான் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த பெண் வேலை செய்ய விரும்பினால், அவள் ஒரு ஆணை மணக்க வேண்டும் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர். எனவே திருமணமாகாத பெண்கள் பொதுப்பணித்துறையில் பணியாற்றுவது சாத்தியமற்றது என ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.