Millet Recipes: ‘குதிரை போல் செயல்பட வைக்கும் குதிரைவாலி அடை!’ செய்வது எப்படி?
ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர். அவர்களது வழியில் இனி நாம் சிறுதானிய உணவுகளை அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியத்தைப் பேணுவோம்.
தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட சிறுதானிய வகைகளின் ஒன்றான குதிரைவாலி புல்லுச்சாமை புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கிழக்கு இந்திய நாடுகளில் பயிரிடப்படுகிறது. குதிரைவாலியின் அறிவியல் பெயர் Echinochloa frumentacea என அழைக்கப்படுகிறது. குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
செய்ய தேவையான பொருட்கள்:-
- குதிரைவாலி அரிசி – 250 கிராம்
- கடலை பருப்பு, துவரைம்பருப்பு தலா – 50 கிராம்
- காய்ந்த மிளகாய் – 12
- நறுக்கிய முருங்கைக்கீரை தளிர் – தேவையான அளவு
- சீரகம் – தேவையான அளவு
- பெருங்காயம் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
குதிரைவாலி தானியம் மற்றும் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் ஆகியவற்றை சேர்த்து 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஊற வைத்த குதிரைவாலியை கொரகொரவென அறைக்க வேண்டும். பின்னர் 2 மணி நேரம் கழித்து துருவிய கேரட் அல்லது நறுக்கிய முருங்கைக்கீரை தளிரை நன்றாக கலக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு அடை சுட்டு எடுக்கவும்.
குதிரைவாலியை அரிசி, தோசை, இட்லி, உப்புமா, பணியாரம், கூழ், சூப் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தலாம்.
குதிரைவாலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-
- உடலில் ஆண்டி அக்ஸிடண்ட் ஆக வேலை செய்கிறது
- புரதச்சத்து நிறைந்த உணவாகும்.
- கொழுப்புச்சத்து குறைவான உணவாகும்.
- நார்ச்சத்து நிறைந்த உணவாகும்.
- இரும்புச்சத்து நிறைந்த உணவாகும்.
- வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
- மலச்சிக்கலைப் போக்கும்.
- கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
- உடலை வலுவாக்கி தாது விருத்தி செய்யும்.