கவுண்டமணியின் அழகுமணி காமெடி நியாபகம் இருக்கா? அழகுமணி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில், தங்களின் காமெடியால் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இவர்களின் பெயரை சொல்லும் போதே இரண்டு பேரின் பெயரையும் சேர்த்துதான் இன்றளவிலும் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு இவர்களின் காம்போ சூப்பர்ஹிட்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் கவுண்டமணி செந்தில் இருவரும் சக்கரவர்திகளாக வலம் வந்தனர். இவர்களின் காம்போவில் வெளியான அனைத்து படங்களும் காமெடி காட்சிகளும் ஹிட்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் கவுண்டமணி செந்தில் இருவரும் சக்கரவர்திகளாக வலம் வந்தனர். இவர்களின் காம்போவில் வெளியான அனைத்து படங்களும் காமெடி காட்சிகளும் ஹிட்
இன்று எவ்வளவோ காமெடி நடிகர்கள் வந்தபோதிலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களாக கவுண்டமணி செந்தில் திகழ்கின்றனர்.
நடிகர் சத்தியராஜ் தான் நடிக்கும் படங்களில் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட்டை பெற்றுவிடுவாராம். சத்தியராஜ் கவுண்டமணி நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் ஹிட் ஆனது.
நடிகர் சத்தியராஜ் கவுண்டமணி இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர், அதில் ஒன்று தான் ‘மகுடம்’ திரைப்படம்.
ஒரு சில காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தும் இன்றும் பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்படும் காமெடியாக இருக்கிறது. அப்படி மக்கள் மத்தியில் இன்றும் நினைவில் நிற்கும் தரமான காமெடி சீன் இந்த படத்தில் உள்ளது.
அதில் கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என் தங்கை என்று கூறிவிடுவார் செந்தில்.
புகைப்படத்தை பார்த்து ஓகே சொல்லிவிடும் கவுண்டமணி காதலில் மிதந்து கொண்டே திருமண மேடையில் பெண்ணுக்காக காத்திருப்பார்.
அப்போது “மாப்பிளை உங்க அழகு மணி வந்திருக்கு பாருங்க..” புகைப்படத்தை பார்த்து கொண்டே அருகில் இருக்கும் செந்திலின் தங்கையை பார்த்து ஐயோ என அலறும் காட்சி இன்றும் பேமஸ்.
அந்த காமெடி காட்சியில் செந்திலின் தங்கை அழகுமணியாக நடித்தவரை நினைவிருக்கிறதா? ‘மாமா..’ என்ற ஒரே டயலாக்கில் பிரபலமானவர் அவர்.
49 வயதாகும் அழகுமணியின் இயற்பெயரே அழகுமணி தானாம்.
ஆசிரியராக பணிபுரிந்து வந்த அழகுமணி தற்போது வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறாராம்.
அழகுமணியின் ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .. அழகுமணி உண்மையாவே அழகு பா என்று நெட்டிசனைகள் வியந்து வருகின்றனர்.