Veg Cutlet : வெஜிடபுள் கட்லெட்; டீயுடன் சேர்த்து சாப்பிட சுவையான ஈவ்னிங் ஸ்னாக்! குழந்தைகளை கவரும்!

இந்த வெஜிடபுள் கட்லெட்டில் அனைத்து காய்கறிகளும் சேர்வதால், இது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற ஒரு ஸ்னாக் என்றால் அது கட்லெட். இது மிருதுவாக இருப்பதால், குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் எளிதாக சாப்பிட முடியும். பொதுவாக கட்லெட் என்றால் கடையில்தான் என்பதைவிட அவற்றை நாம் வீட்டிலே செய்யவும் முடியும்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 5 வேகவைத்தது

பச்சை பட்டாணி – 1 கப் வேகவைத்தது

கேரட் – 1 துருவியது

பச்சை குடைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது

காலிஃபிளவர் – 1 கப் வேகவைத்தது

பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது

இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு

எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

சீரக தூள் – அரை ஸ்பூன்

முந்திரி பருப்பு நறுக்கியது – அரை கப்

பிரட் தூள் – 2 கப்

சோள மாவு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

அகல பாத்திரத்தில், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், குடைமிளகாய், காலிஃபிளவர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழச்சாறு போடவேண்டும்.

இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

அடுத்து இதில் முந்திரி பருப்பு, பிரட் தூள் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

சிறிதளவு கட்லெட் கலவையை எடுத்து வடை போல் தட்டிக்கொள்ள வேண்டும்.

சிறிய கிண்ணத்தில், சோள மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி, கட்டி இன்றி கரைத்துக்கொள்ள வேண்டும்.

செய்த கட்லெட்’டை சோள மாவு கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டிக்கொள்ள வேண்டும்.

இதை 10 நிமிடம் ஃபிரிட்ஜ்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, செய்த கட்லெட்டை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவையான வெஜிடபுள் கட்லெட் தயார்.

இதில் பன்னீர் துருவி சேர்த்தால் அது பன்னீர் கட்லெட். உங்களுக்கு தேவையென்றால் பன்னீர் தூவிக்கொள்ளலாம்.

கடாயில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து நீங்கள் கட்லெட்டை ஷேலோ ஃப்ரையும் செய்யலாம் அல்லது நிறைய எண்ணெய் சேர்த்து டீப் ஃப்ரையும் செய்து எடுக்கலாம்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *