முல்தானி மெட்டி.. தயிர் இருக்கா? லெமன் இருக்கா? முல்தானி மெட்டியை “இப்படி” முகத்துக்கு போடக்கூடாதாமே
இது வெறும் களிமண்தான்.. ஆனால், ஆனால், மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட், டாலமைட் என ஏகப்பட்ட கனிமங்களை உள்ளடக்கியது..
சரும கவசம்: நேரடியாகவே முகத்துக்கு பயன்படுத்தினாலும் பாதிப்பை தராதது.. சருமத்துக்கு கவசம் போல திகழ்கிறது இந்த முல்தானி மிட்டியாகும்.. சருமத்திலுள்ள பருக்கள், எண்ணெய் பிசுபிசுப்பு, அழுக்குகள், கசடுகளை நீக்கும் தன்மை கொண்டது..
தோலிலுள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையையும், பளபளப்பையும் தரக்கூடியது.. சுத்தமான பாலுடன், இந்த களிமண்ணையும் சேர்த்து சருமத்துக்கு பூசும்போது, இறந்த செல்கள் நீங்குகின்றன..
வறண்ட சருமம்: மேலும் முல்தானி மிட்டியை பாலுடன் கலந்து முகத்தில் தடவும்போது, சுருக்கங்கள் மறைந்து சருமம் இறக்கமாகும்.. இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிறமாற்றம் ஏற்பட்டிருந்தாலும் நீங்கிவிடும்.
வெயிலில் ஏற்படும், கண் எரிச்சல், தோல் தடிப்பது, தோல் சிவப்பது, போன்ற பிரச்சனைகள் இருந்தால், குளிர்ச்சியான இந்த முல்தானி மெட்டி கலவையை பூசினாலே போதும்.. பசும்பால் கிடைக்காவிட்டால் சந்தனம் கலந்தும் முல்தான் மிட்டியை தடவி வரலாம்.. தேவைப்பட்டால், இதனுடன் சிறிது ரோஸ் வாட்டரையும் கலந்து கொள்ளலாம். முல்தானி மெட்டி + சந்தனம் + ரோஸ் வாட்டர் இவைகளை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வரலாம்..
அல்லது முல்தானி மெட்டியுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து முகத்துக்கு தடவலாம். அல்லது கற்றாழை + முல்தான் மெட்டி இரண்டையும் சேர்த்து தடவலாம். அல்லது முல்தானி மெட்டி தயிர் என இரண்டையும் சேர்த்து தடவலாம். முல்தானி மெட்டியுடன் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தினால், மிருதுவான சருமம் கிடைக்கும்.
ஆயில் ஸ்கின்: ஆயில் ஸ்கின் இருப்பவர்கள், முல்தானி மட்டியுடன், மஞ்சள், சந்தனப்பொடி இந்த மூன்றையுடம் கலந்து முகத்தில் தடவலாம்.. வறண்ட சருமம் உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன், தயிர், ரோஸ் வாட்டர், கலந்து தடவி வரலாம்..
முல்தானி மட்டியை முகத்துக்கு அப்ளை செய்யும்போது, கண்களை சுற்றி தடவ கூடாது.. அப்படி தடவினால், கண்களை சுற்றியுள்ள நீர்ச்சத்தையும் உறிஞ்சிவிடும்.. இதனால் சருமம் மேலும் அதிகமாக வறட்சியாகிடும்.. சுருக்கத்தையும் தந்துவிடும். அதேபோல, வாய்க்குக்குள்ளும் இந்த கலவை போய்விடக்கூடாது.
கெமிக்கல்ஸ்: அதேபோல, முல்தானி மிட்டியை எந்தவகையில் பேஸ்பேக்காக முகத்தில் தடவினாலும், அதை கழுவும்போது சோப்பு, ஃபேஸ்வாஷ் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தக்கூடாது. இதனால் சருமத்தில் அழற்சி, எரிச்சல், அரிப்பு உண்டாகும்.
வெயிலில் அலைந்து, சருமத்தின் நிறம் மாறியிருந்தால், இதற்கும் முல்தானி மெட்டி நிவாரணம் தருகிறது. இந்த சருமம் மாற வேண்டுமானால், இந்த 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் தயிர், 1 ஸ்பூன் புதினா பவுடர் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும்.