Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” – கலங்கிய மணிச்சந்திரா!
பிக் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னர் அப்பாக மணிச்சந்திராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு மணிச்சந்திரா முதன்முறையாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கும் ரவீணாவுக்கும் இடையே இருந்த உறவு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளா மணிச்சந்திரா.
எனக்கும் ரவீணாவுக்கும் பிக் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னரே நல்ல ஒரு நட்பு இருந்தது. அவங்க பிக் வீட்டுக்கு வராங்க என்ற விஷயம் எனக்கு கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. அப்போ எனக்கு ரொம்ப யோசனையாவே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போகலாமா இல்லை வேணாமா? போனா எங்க இரண்டு பேராலும் சகஜமா விளையாட முடியுமா? இப்படி பல கேள்விகள் இருந்தது. சரி என்ன ஆகிவிடப் போகுது என என் மேல நம்பிக்கை இருந்ததால தான் நான் பிக் வீட்டுக்குள் போனேன்.
பிக் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருந்தது உண்மை தான். அதற்காக நான் அவங்க விளையாட்டை தடுத்தேன் என்பது எல்லாம் உண்மையில்லை. பலரும் ‘நான் சேஃப் கேம் ஆடுறேன், ரவீணாவை வைத்து தான் விளையாடுறேன்’ இப்படி பல குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். ஆனால் எனக்கு தெரியும் நான் யார் என்பது, அது எனக்கு போதும்.
ரவீணா அம்மா வீட்டுக்கு வந்த போது நான் கொடுத்த ரியாக்ஷன் என்னையும் அறியாமல் வந்தது தான். சரி ஸ்டோர் ரூமுக்கு வரச்சொன்னதும் அவங்க சேஃப் பண்ண தான் அப்படி சொல்றாங்க என நினச்சேன். ஆனால் அங்க ரவீணா அம்மா இருப்பாங்க என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது இருக்க தானே செய்யும்! ஏன்னா முதல் நாள் தான் ரவீணா சொந்தகாரங்க ஒருத்தங்க வந்து பயங்கரமா என்னை ஆட்டி வச்சுட்டு போனாங்க. பிக் சீசன் 7 நிகழ்ச்சியிலேயே அதுதான் பயங்கரமான பரபரப்பு ஏற்படுத்திய ஒரு எபிசோடாக இருந்து இருக்கும் என நினைக்கிறன்.