RJ Balaji: “சிவகார்த்திகேயன் படம் மட்டும் காப்பி இல்லையா..?” பங்கமாக கலாய்த்த ஆர்ஜே பாலாஜி
சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனின் படத்தை ட்ரோல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி
ரேடியோ ஜாக்கியாக மக்களிடம் பிரபலமான ஆர்ஜே பாலாஜி, தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நாளை வெளியாகிறது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை கடந்த வாரம் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிங்கப்பூர் சலூன் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்ஜே பாலாஜி பங்கேற்று வந்தார்.
அப்போது சிவகார்த்திகேயன், ஹிப் ஹாப் தமிழா ஆகியோரின் படங்களை ஆர்ஜே பாலாஜி பங்கமாக கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு’, சிவகார்த்திகேயனின் ‘கனா’ படங்களைப் போல இருப்பதாக வரும் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் ஹிப் ஹாப் தமிழா நடித்த இரண்டு படங்களும், சிவகார்த்திகேயனின் 2 படங்களையும் மிக்ஸியில் போட்டு அடித்தது மாதிரி இருக்கே என்று தொகுப்பாளர் கலாய்க்க, அதற்கு காமெடியாக பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி.
சிங்கப்பூர் சலூன் மற்ற படங்களின் காப்பிலாம் இல்லை எனக் கூறினார். அதேபோல் கனா, மீசைய முறுக்கு படங்கள் போல சிங்கப்பூர் சலூன் இருக்கும் என்றால், சிவகார்த்திகேயனின் படம் எதிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது, அப்போ அவங்களும் காப்பி எடுத்தார்கள் என பங்கமாக கலாய்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக சிங்கப்பூர் சலூன் மாதிரி ஆயிரம் படங்கள் இதுக்கு முன்பே வந்துவிட்டன. இப்போது ஆயிரத்து ஒன்றாவது படமாக சிங்கப்பூர் சலூன் இருக்கும் எனக் கூறியுள்ளார்.