இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
சென்னை: இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் நடித்த ‘டேவிட்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் பிஜோய் நம்பியார். பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களை இயக்கியுள்ளார்.
தற்போது அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமை வைத்து தமிழில் போர் என்றும் ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்து ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் தயாரிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஆக்ஷன் டிராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.