RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜியால் கடுப்பான ரசிகர்கள்! என்ன செய்தார் தெரியுமா?
ஆர்.ஜே-துணை நடிகர்-ஹீரோ..
ரேடியோவில் ஆர்.ஜேவாக வந்த பாலாஜிக்கு, பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களிலும், துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். வல்லினம், இது என்ன மாயம், வேலைக்காரன், நானும் ரௌடிதான், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரை சிரிக்க வைத்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, இவர் படத்தை இயக்கி நடிக்க ஆரம்பித்தார். முதன் முதலில் இவர் எழுதிய எல்.கே.ஜி படத்தை பிரபு இயக்கியிருந்தார். அவரே ஹீராேவாக நடித்திருந்த இந்த படம், அரசியல் த்ரில்லராக உருவாகியிருந்தது. இதையடுத்து, வீட்ல விசேஷம் படத்தையும், மூக்குத்தி அம்மன் படத்தையும் இயக்கி நடித்தார். இப்படி, ஆரம்பத்தில் இருந்து தன் முயற்சியால் வளர்ந்த நடிகர்களுள் இவரும் ஒருவர்.
சிங்கப்பூர் சலூன்:
ஹீரோவாக நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், நாளை (ஜனவரி 25) வெளியாக உள்ளது. இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி, சத்யராஜ், கிஷன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை கோகுல் இயக்கியிருக்கிறார். சிகை அலங்கார நிபுணர், தனது கனவை நோக்கி ஓடி, அதில் எப்படி சாதிக்கிறார் என்பது போல இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. இவரது பிற படங்கள் பாேல, இந்த படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிகர் ஜீவா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.