ஐஸ்வர்யா ராய் எல்லாம் இல்லை.. தக் லைஃப் படத்துல கமலுக்கு யாரு ஜோடி.. கடுப்பாக்கிய மணிரத்னம்?
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் இத்தனை ஆண்டுகளாக புத்தக விற்பனையில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று வந்த பொன்னியின் செல்வன் நாவல் இந்த ஆண்டு விற்பனையில் பெரும் சரிவை சந்தித்ததாக ஒரு பக்கம் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
பொன்னியின் செல்வன் பர்னிச்சரை எந்த அளவுக்கு உடைக்க முடியுமோ அந்த அளவுக்கு உடைத்து விட்டார் மணிரத்னம்.
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். எச் வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தற்போது அஜித் போல அந்த படத்தை டிராப் செய்துவிட்டு தக் லைஃப் படம் பக்கம் வந்துவிட்டார்.
நயன்தாரா நடிக்கல: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள தக் லைஃப் படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்க உள்ளார் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது ஆன்போர்ட் அறிவிப்பு மூலமாக உறுதி செய்யப்பட்டது. இதுவரை கமல்ஹாசன் உடன் நயன்தாரா இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் இல்லை: நடிகை திரிஷா இணைந்த நிலையில் நயன்தாராவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில், ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை ஐஸ்வர்யா லட்சுமி தான் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கமலுக்கு யாரு ஜோடி: இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, தக் லைஃப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியே இல்லை என்கிற திடுக்கிடும் தகவல் தற்போது கசிந்து தீயாக பரவி வருகிறது. நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் உள்ள நிலையில், இருவருமே கமலுக்கு ஜோடி இல்லை என்றும் மற்ற இரு இளம் நடிகர்களுக்கு தான் அவர்கள் இருவரும் ஜோடி என்றும் கூறுகின்றனர்.
துல்கர் சல்மானுக்கு திரிஷா: தக் லைஃப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்குத்தான் இந்த படத்தில் திரிஷா ஜோடியாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயம் ரவிக்கு ஐஸ்வர்யா லட்சுமி: மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.