எதிர்பாராத சூழல்… ஆனா காரணம் சொல்ல மாட்டேன் : சந்தியா ராகம் சீரியல் நடிகை வைரல் பதிவு
ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் நடித்து வந்த நடிகை வி.ஜே தாரா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் , இது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தனது விலகளுக்கான காரணம் குறித்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். இந்தியில் வெளியான, சொப்னோசுஹானி லடக்பென் கே என்ற சீரியலின் ரீமேக்காக தயாராகியுள்ள இந்த சீரியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரவு 7 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ராஜீவ் பரமேஷ்வர், சந்தியா ஜகர்லம்முடி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தனலட்சுமி என்ற கேரக்டரில் வி.ஜே தாரா நடித்து வந்தார். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வி.ஜே தாரா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக, பாவனாலஸ்யா தனலட்சுமி கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தனிப்பட்ட காரணங்களுக்காக வி.ஜே தாரா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படும் நிலையில்,தனது விலகல் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், ஹாய் மக்களே, எதிர்பாராத சூழலில் கனத்த இதயத்துடன் சந்தியா ராகம் சீரியலில் இருந்து விலகுகிறேன். நிச்சயமாக அதற்கான காரணம் என்ன என்று நான் வெளியிடப்போவதில்லை.