இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படம் ரிலீஸ் தெரியுமா? சாம் பகதூர் முதல் பேட்லேண்ட் ஹன்டர்ஸ் வரை லிஸ்ட்!

1964 ஆம் ஆண்டு நாவலான சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரியை தழுவி உருவான படம். இதில் வில்லி கேரக்டரான வொன்கா என்பதை டைட்டிலாக வைத்துள்ளார்கள். ஒரு சாக்லேட் கடையைத் திறக்கும் அவரது கனவை நனவாக்க ஐரோப்பாவிற்கு வரும் அவருக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. நகரின் சாக்லேட் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற சாக்லேட் கார்டலை எதிர்கொண்டு சாதிக்கிறார் என்பதே கதை.

கிரிசெல்டா

1970 மற்றும் 80 களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இருந்து மியாமிக்கு புலம் பெயர்ந்த பெண் அங்கு எப்படி சக்திமிக்க நபராக மாறுகிறார் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று படம் வெளியாகியுள்ளது.

குயீர் ஐ சீசன் 8

இந்த வெப்சீரிஸின் 7 சீசன்கள் வெளிவந்த நிலையில் இன்று 8 ஆவது சீசன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 7 சீசன்களும் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மாஸ்டர்ஸ் ஆஃப்தி யூனிவர்ஸ் : ரிவோல்யூஷன்

தொழில்நுட்பத்திற்கும் மாய சக்திக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் இதன் ஒன்லைன். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.

பேட்லேண்ட் ஹன்டர்ஸ்

பைத்தியக்கார மருத்துவர் சோதனைக்காக சில நபர்களை பிடித்து வைத்துள்ளார். அதில் சிக்கிய ஹீரோ நாம் சான் எப்படி தப்பிக்கிறார் என்பது படத்தின ஒன்லைன். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் நாளை மறுதினம் வெளியாகிறது.

இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்சாவின் பயோ பிக் தான் இந்த சாம் பகதூர் திரைப்படம். 1934 இல் தொடங்கி 1971 இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் வரையில் மானெக்சாவின் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்கள் படமாக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *