PF தகவல்.. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு அக்கவுண்டை மாற்றம் செய்வது எப்படி?

எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) என்பது எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தால் (EPFO) எம்பிளாயிகளுக்கு வழங்கப்படும் ஒரு ஓய்வு கால பலன் அமைப்பு. எம்ப்ளாயிகள் ஓய்வு காலத்திற்கு சேமிப்பதற்கு அரசு ஸ்பான்சர் செய்யக்கூடிய ஒரு சேமிப்பு திட்டம் இது. இந்த திட்டத்தில் எம்பிளாயிகள் மாத வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை அவர்களது (வழக்கமாக பேசிக் பே + டியர்னஸ் அலவன்ஸில் 12 சதவீதம்) EPF அக்கவுண்டில் செலுத்த வேண்டும். எம்ப்ளாயிகள் பங்களிக்க கூடிய அதே தொகையை எம்ப்ளாயர்களும் பங்களிப்பார்கள். EPF அக்கவுண்டிற்கு பெறப்படும் பங்களிப்புகள் அரசு நிர்ணயித்த ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை பெற்று வரும். ஒருவேளை நீங்கள் உங்களது நிறுவனத்தை மாற்றி இருந்து உங்களது PF ஐ பழையதிலிருந்து புதிய ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறீர்களானால் நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகள் இதோ.

பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:

உங்களது EPF அக்கவுண்டில் லாகின் செய்யவும். இதற்கு உங்களிடம் ஒரு UAN மற்றும் பாஸ்வேர்டு இருக்க வேண்டும்.

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்பதை கிளிக் செய்யுங்கள்.

இங்கு ‘Online Services’ பிரிவில் ‘One Member – One EPF Account (Transfer Request)’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

தனிநபர் விவரம் மற்றும் தற்போதைய PF அக்கவுண்ட் விவரங்களை கவனமாக சரி பார்க்கவும்.

இதற்கு முந்தைய வேலைக்கான PF அக்கவுண்ட் விவரங்களை பெறுவதற்கு ‘Get Details’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

எம்ப்ளாயரை தேர்வு செய்து உங்களது மெம்பர் ID அல்லது UAN ஐ என்டர் செய்யவும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP பெறுவதற்கு ‘Get OTP’ பட்டனை என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த பெறப்பட்ட OTP ஐ என்டர் செய்து ‘Submit’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து ஒரு ஆன்லைன் PF டிரான்ஸ்ஃபர் கோரிக்கை படிவம் ஒன்று காண்பிக்கப்படும். அதில் செல்ஃப் அட்டஸ்டேஷன் வாங்கி நீங்கள் தேர்வு செய்த எம்ப்ளாயருக்கு PDF வடிவத்தில் அதனை அனுப்ப வேண்டும். EPF டிரான்ஸ்ஃபர் கோரிக்கை சம்பந்தமான ஆன்லைன் நோட்டிஃபிகேஷனை எம்ப்ளாயரும் பெறுவார்.

பின்னர் எம்ப்ளாயர் PF டிரான்ஸ்ஃபர் கோரிக்கையை எலக்ட்ரானிக் முறைப்படி அங்கீகரிப்பார். அங்கீகரித்த பிறகு PF உங்களுடைய தற்போதைய எம்ப்ளாயருடனான புதிய அக்கவுண்டிற்கு மாற்றப்படும்.

ஆன்லைன் அப்ளிகேஷனை கண்காணிப்பதற்கு உங்களுக்கு ட்ராக்கிங் ID வழங்கப்படும்.

PF ஐ ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு என்னென்ன டாக்குமென்ட்கள் தேவைப்படும்?

படிவம் 13

ஆதார் அட்டை

PAN கார்டு

வங்கி கணக்கு விவரங்கள்

முந்தைய எம்ப்ளாயர் விவரங்கள்

பழைய மற்றும் புதிய PF அக்கவுண்ட் விபரங்கள்

PF ஐ ஆன்லைனில் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பொழுது எம்ப்ளாயிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

UAN ஆக்டிவாக இருக்க வேண்டும்.

உங்களது வங்கி கணக்கு உங்களுடைய UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

KYC வெரிஃபை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

முந்தைய மற்றும் தற்போதைய எம்ப்ளாயர்கள் ஆகிய இருவரும் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கையெழுத்துக்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டு வேலைகளுக்குமான PF எண்கள் EPFO டேட்டா பேஸில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *