Aus vs Pak 2nd Test: 2வது டெஸ்டுக்கான ஆஸி.,-பாக்., பிளேயிங் லெவன் அறிவிப்பு: பாக்., தரப்பில் 3 மாற்றங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படாத பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்ட் என்பது குத்துச்சண்டையில் மல்லுக்கட்டுவது போன்று என்ற அர்த்தம் கிடையாது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டி பாக்ஸிங் டே என்றழைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பாக்ஸ் ஒன்று வைக்கப்படுவது வழக்கம். அதில் சேரும் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கிறிஸ்துமஸுக்கு மறுநாள் அதாவது டிசம்பர் 26ம் தேதி பிரித்து ஏழைகளுக்கு கொடுக்கும் முறை இருந்து வருகிறது.
அன்றைய தினத்தில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் நடத்துவது வழக்கமானது. இதையொட்டி அதை பாரம்பரியமாக ஆஸ்திரேலியா நடத்தியும் வருகிறது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ஏதோ ஒரு நாட்டு அணியுடன் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருக்கும்.
அந்த வகையில் இந்தமுறை பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பிளேயிங் லெவனை ஆஸி., நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா XI: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்.
இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார், அதே நேரத்தில் பெர்த்தில் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரப்பும் வெளியேறுகிறார். இதுதவிர சர்ஃபராஸும் பிளேயிங் லெவனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளார்.
Pakistan announce 12-man squad for second Test 🏏
The final XI will be named tomorrow.#AUSvPAK pic.twitter.com/hZsky4cPcN
— Pakistan Cricket (@TheRealPCB) December 25, 2023
பெர்த் டெஸ்டில் அவர் சந்தித்த மோசமான ஆட்டத்திற்கு பிறகு சர்ஃபராஸ் அகமது இரண்டாவது டெஸ்டில் ஓரங்கப்பட்டுள்ளார். இது பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும்.
அவருக்குப் பதிலாக முகமது ரிஸ்வான்
சேர்க்கப்பட்டுள்ளார், இதனுடன் வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டன, வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார், அதே நேரத்தில் ஆல்-ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரப்பும் மோசமான சோதனைக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பெர்த்தில் பந்து.