ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன்ஹெய்மர்..!

96 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 13 பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, பட்டியலில் முதன்மை வகிக்கிறது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்பட 13 பிhவுகளில் ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சில விருதுகளையேனும் இப்படம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதுப் போட்டியில் இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்த இறுதி பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருது பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட, டு கில் ஏ டைகர் ஆவணப்படம் இடம் பிடித்துள்ளது. சிறந்த படம்: ‘ஓபன்ஹெய்மர்’ (Oppenheimer), ‘பார்பி’ (Barbie), ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்’ (Killers Of The Flower Moon), ‘பாஸ்ட் லைவ்ஸ்’ (Past Lives), ‘புவர் திங்க்ஸ்’ (Poor Things), ‘ஹோல்டோவர்ஸ்’ (The Holdovers), ‘அமெரிக்கன் ஃபிக்ஷன்’ (American Fiction), ‘மேஸ்ட்ரோ’ (Maestro), ‘தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட்’ (The Zone Of Interest), ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy Of A Fall).
சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோஃபர் நோலன் (ஓபன்ஹெய்மர்), மார்ட்டின் ஸ்கோர்செஸி (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), யோர்கோஸ் லாந்திமோஸ் (புவர் திங்க்ஸ்), ஜொனாதன் கிளேசர் (தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட்), ஜஸ்டின் ட்ரைட் (அனாடமி ஆஃப் எ ஃபால்)
சிறந்த நடிகை: லில்லி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), எம்மா ஸ்டோன் (புவர் திங்க்ஸ்), கேரி முல்லிகன் (மேஸ்ட்ரோ), சாண்ட்ரா ஹுல்லர்(அனாடமி ஆஃப் எ ஃபால்), அனெட் பெனிங் (நியாட்)

சிறந்த நடிகர்: சிலியன் மர்பி (ஓபன்ஹெய்மர்), பிராட்லி கூப்பர் (மேஸ்ட்ரோ), ஜெஃப்ரி ரைட் (அமெரிக்கன் பிக்ஷன்), பால் கியாமட்டி (தி ஹோல்டோவர்ஸ்), கோல்மன் டொமிங்கோ (ரஸ்டின்)
சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்), எமிலி பிளண்ட் (ஓப்பன்ஹைமர்), ஜோடி ஃபாஸ்டர் (நியாட்), அமெரிக்கா ஃபெரெரா (பார்பி), டேனியல் ப்ரூக்ஸ் (தி கலர் பர்பிள்)சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்), ரியான் கோஸ்லிங் (பார்பி), ராபர்ட் டி நீரோ (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), ஸ்டெர்லிங் கே பிரவுன் (அமெரிக்கன் பிக்ஷன்), மார்க் ருஃபாலோ (புவர் திங்ஸ்)
சிறந்த அசல் திரைக்கதை: ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy Of A Fall), ‘பாஸ்ட் லைவ்ஸ்’ (Past Lives), ‘மேஸ்ட்ரோ’ (Maestro),‘ஹோல்டோவர்ஸ்’ (The Holdovers), மே டிசம்பர் (May December)

சிறந்த தழுவல் திரைக்கதை: ‘அமெரிக்கன் ஃபிக்ஷன்’, ‘பார்பி’, ‘ஓபன்ஹெய்மர்’, ‘புவர் திங்க்ஸ்’, ‘தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட்’.
சிறந்த சர்வதேச திரைப்படம்: ‘Io Capitano’ (இத்தாலி), ‘பெர்ஃபெக்ட் டேஸ்’ (ஜப்பான்), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பெயின்), ‘தி டீச்சர்ஸ் லான்ஞ் (ஜெர்மனி), ‘ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்’ (லண்டன்)
சிறந்த அனிமேஷன் முழு நீளத்திரைப்படம்: ‘தி பாய் மற்றும் தி ஹெரான்’ (The Boy And The Heron), ‘எலமென்டல்’ (Elemental), ‘ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ (Spider-Man: Across The Spider-Verse), ‘ராபர்ட் ட்ரீம்ஸ்’ (Robot Dreams).

சிறந்த ஆவணப்படம்: ‘டு கில் ஏ கில்லர்’ (To Kill A Tiger), ‘ஃபோர் டாட்டர்ஸ்’ (Four Daughters), ‘எட்டர்னல் மெமரி’ (Eternal Memory), ‘போபி ஒயின்: பிபிள்ஸ் பிரசிடன்ட்’ (Bobi Wine: The People’s President).
சிறந்த ஒளிப்பதிவு: ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்’, ‘புவர் திங்க்ஸ்’, ‘ஓபன்ஹெய்மர்’, ‘மேஸ்ட்ரோ’

சிறந்த பின்னணி இசை: ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்’‘புவர் திங்க்ஸ்’, ‘ஓபன்ஹெய்மர்’, ‘அமெரிக்கன் ஃபிக்ஷன்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *