மொறு மொறு அச்சு முறுக்கை சிம்பிளா செய்யலாம்.. இதோ ரெசிபி

அச்சு முறுக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது அச்சு முறுக்கு தான். ரோஸ் குக்கீகள் என்று அழைக்கப்படும் அச்சு முறுக்கு பிரத்யேக வகை அச்சை பயன்படுத்தி எண்ணெய்யில் சுடப்படும் ஸ்நாக்ஸ் வகையாகும்.

இது இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமாக உள்ளது. இதனை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

வீட்டிலேயே இந்த அச்சு முறுக்கை எவ்வாறு மொறு மொறுவென்று சுவையாக செய்யலாம் என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 1 கப்

மைதா – 1/2 கப்

பொடி சர்க்கரை – 1/2 கப்

தேங்காய் பால் – 2 கப்

ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

எண்ணெய்

செய்முறை :

முதலில் சக்கரையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மசிய அரைத்து சல்லடை கொண்டு நன்கு சலித்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து சலித்த அரிசி மாவு மற்றும் மைதா மாவை சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு : அரிசி மாவு எவ்வளவு எடுக்குறீங்களோ அதில் பாதியளவு மைதா மாவு எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அதில் அரைத்து சலித்து வைத்துள்ள சர்க்கரை பொடி, ஏலக்காய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

அடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அச்சு முறுக்கு செய்ய தேவையான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் சேர்த்துக் எண்ணெய்யை சூடாக்கி அதில் அச்சு முறுக்கு செய்ய தேவையான அச்சை 20 நொடிகள் வைக்கவும்.

பின்னர் அந்த அச்சை கலந்து வைத்துள்ள மாவில் அழுத்தி அதனை சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான மொறு மொறு அச்சு முறுக்கு ரெடி.

இதனை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *