டிவி நிகழ்ச்சி அறிமுகம்.. 3 ஆண்டுகள் பழக்கம்.. நடிகையுடன் மாலிக்குக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையே ஏற்பட்ட பிரிவு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. மனைவி இருக்கும் போதே மூன்று ஆண்டுகளாக சோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் உடன் தொடர்பில் இருந்ததாக பிரபல பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
இதேபோன்று நடிகை சனா ஜாவித்தும் கணவர் இருக்கும் போதே சோயப் மாலிக்குடன் நெருங்கி பழகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு எதிர்ப்புகளை மீறி ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010ஆம் ஆண்டு திருமணம் முடித்தார்.
இருவருக்கும் இஸ்ஹான் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக சானியா மற்றும் சோயப் மாலிக் இடையே பிரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை மறுக்கும் வகையில் சில புகைப்படங்கள் வெளியானதால் இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள இருவரின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை சோயப் மாலிக் திருமணம் முடித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளன. 3 மாதங்களுக்கு முன்னதாக சானியா மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் விவாகரத்து பெற்றதாக அடுத்து ஒரு தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் மனைவி இருக்கும்போதே மூன்று ஆண்டுகளாக நடிகையுடன் சோயப் மாலிக் தொடர்பில் இருந்ததாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது முதன்முறையாக சோயப் மாலிக் நடிகை சனா ஜாவித்தை, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். இதன் பின்னர் இருவரும் அடிக்கடி பார்த்து பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சனா ஜாவித் வந்தால் மட்டுமே தான் பங்கேற்பேன் என்று அதிரடியான கண்டிஷனை சோயப் மாலிக் போட்டுள்ளார்.
அதேநேரம் சனா ஜாவித், உமர் ஜஸ்வால் என்பவரை திருமணம் முடித்து இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பாகத்தான் தனது கணவர் உமர் ஜஸ்வாலிடம் சனா ஜாவித் விவாகரத்து கோரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சோயப் மாலிக்கின் முழு குடும்பமும் சானியா மிர்சாவுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சோயப் மாலிக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சனா ஜாவித் உடைய திருமணத்தில் பங்கேற்க வில்லை என்று பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.