இந்தியாவில் கேலக்ஸி வாட்ச் சீரிஸில் BP மற்றும் ECG கண்காணிப்பு அம்சங்கள்… சாம்சங் அறிவிப்பு!
சமீப காலமாக ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கான மிகச்சிறந்த ஸ்மார்ட் வாட்ச்களாக சாம்சங் கேலக்ஸி வாட்ச்கள் இருந்து வருகின்றன. எனினும் இந்தியாவில் விற்கப்படும் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்களில் பிளட் பிரஷர் மானிட்டரிங் மற்றும் ஈசிஜி மெஷர்மென்ட் ஆகிய 2 முக்கிய சுகாதார அம்சங்கள் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த 2 முக்கிய அம்சங்களும் ஆப்பிள் வாட்ச்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் யூஸர்கள் தங்களது ஸ்மார்ட் வாட்ச்களில் பெற்று வரும் இந்த 2 அம்சங்களை தற்போது இந்தியாவில் உள்ள சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் யூஸர்களும் பெறலாம். நிறுவனம் அதன் Galaxy Watch சீரிஸிற்கான Samsung Health Monitor ஆப்-ல் ரத்த அழுத்தம் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) கண்காணிப்பு அம்சங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. இறுதியாக இந்தியாவில் இந்த முக்கிய 2 சுகாதார அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4, சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் வாட்ச்களில் வெளியிடப்படுகின்றன.
சாம்சங் நிறுவனம் தனது ரத்த அழுத்தம் மற்றும் ECG கண்காணிப்பு அம்சங்களுக்கு இந்திய மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸில் புதிதாக சேர்க்கப்பட்ட இந்த அம்சங்கள் சப்போர்ட் செய்யப்படுகின்றன. அப்டேட் செய்யப்பட்ட சாம்சங் ஹெல்த் மானிட்டர் ஆப் மூலம் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ்களுக்கு விரைவில் இந்த அம்சங்கள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த கேலக்ஸி வாட்சுகளில் ஏற்கனவே எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி) மானிட்டரிங், ரத்த அழுத்த கண்காணிப்பிற்காக PPG சென்சார் வடிவில் பிரத்யேக ஹார்ட்வேர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் பிரஷர் என இரண்டையும் அளவிடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சங்களுக்கு கிளியரன்ஸ் கிடைக்காததால் முடக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்தியாவின் Central Drugs Standard Control அமைப்பிடமிருந்து சாம்சங் இந்த அம்சங்களுக்கு ரெகுலேட்ரி கிளியரன்ஸை பெற்றுள்ளதால், இந்த 2 அம்சங்களை கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்களில் சேர்ப்பதற்கான அப்டேட்ஸ்கள் புதிய ஓவர்-தி-ஏர் அப்டேட்ஸ் மூலம் வெளியிடப்படுகின்றன. சாம்சங் ஹெல்த் மானிட்டர் ஆப்பிற்கான இந்த புதிய அப்டேட், ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவுசெய்யப்பட்ட ஈசிஜி மற்றும் ரத்த அழுத்த தரவைச் சேமித்து பகிர்ந்து கொள்ள யூஸர்களை அனுமதிக்கிறது. ECG அம்சமானது சீரற்ற இதய துடிப்பு அல்லது அரித்மியா (arrhythmia) நிலை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சம் யூஸர்களின் ஸ்மார்ட் வாட்ச்சில் அடிக்கடி அல்லது பலமுறை Atrial fibrillation பதிவாவது கண்டறிந்தால், எச்சரித்து உயிரை காப்பாற்று திறன் கொண்டுள்ளது.
சாம்சங்கின் Galaxy Smartwatch-ல் ECG எடுப்பது எப்படி?
– இந்த அம்சம் வேலை செய்ய முதலில் நீங்கள் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோனை வைத்திருக்க வேண்டும்
– உங்கள் கேலக்ஸி வாட்சை உங்களின் கேலக்ஸி ஸ்மார்ட் ஃபோனுடன் கனெக்ட் செய்யவும்
– இப்போது உங்கள் கேலக்ஸி ஸ்மார்ட் வாட்சை இறுக்கமாக அணிந்து கொண்டு, உங்கள் ஸ்மார்ட்வாட்சில் Samsung Health ஆப்-ஐ ஓபன் செய்யவும்.
ஈசிஜி ரீடிங் எடுக்க ஆப்ஸ் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும்
– வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் ரீடிங் எடுத்தவுடன் அந்த ரிப்போர்ட் உங்கள் Samsung டிவைஸிலும் கிடைக்கும்